உரிமைத் தொகை போதுமான எண்ணிக்கையில் தராததால் தோல்வி – தி.மு.க கள ஆய்வு
தேர்தல் தோல்வியை ஆராய்வதற்கு தி.மு.க தலைமை சார்பில் கள ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டிருந்தது. கள ஆய்வு நடத்திய குழு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், அறிக்கை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
அறங்காவலர் நியமன பொறுப்பில் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-விற்கு வந்தவர்களுக்கும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவிற்கு தெரிந்தவர்களுக்கும் மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை போதுமான எண்ணிக்கையில் கொடுக்கப்படாததால் மக்கள் மத்தியில் அவ நம்பிக்கை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





