6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட அதிசய கோழி..!
கேரளாவில் கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளைப் இட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் ஏழு மாதங்களுக்கு முன்பு 25க்கும் ஏற்பட்ட கோழிகளை வாங்கி வளர்த்து வந்தார். அதில் ஒரு கோழி அவரின் மகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதையடுத்து அந்த கோழிக்கு சின்னு என பெயரிட்டு அவர் மகள் செல்லமாக வளர்த்து வந்தார். தற்போது 6 மணி நேரத்தில் 24 முட்டைகளைப் போட்டு குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்நிலையில் இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.





