பொங்கல் விழாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்ட கல்லை தூக்கி அசத்தல்.!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிலை என்ற இடத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்ட கல்லை தூக்கி அசத்தியுள்ளனர்.
இளைஞர் மன்றம் சார்பில் நடைபெற்ற போட்டியில் 129 கிலோ எடைகொண்ட இளவட்ட கல்லை தூக்கி தங்கராஜ் என்ற இளைஞர் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடம் முத்துப்பாண்டி என்பவருக்கு கிடைத்துள்ளது.
ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பலரும் இளவட்டக்கல் மற்றும் அம்மியை தூக்கி அசத்தியுள்ளனர். பத்மா என்பவர் 45 கிலோ எடை உள்ள பொருளை தூக்கி முதல் பரிசை பெற்றார்.
இதே போட்டியில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் உரலை ஒருகையில் உயரத்தில் நிறுத்தி தங்கள் உடல் பலத்தை நிரூபித்தனர்.






