--- --:--:-- --

இரவு பணியின் பொழுது மர்மமான முறையில் உயிரிழந்த பெண்..!

7

யிலாடுதுறை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு சென்ற செவிலியர் உயிரிழந்தார். செவிலியராக பணியாற்றி வந்தவர் தையல்நாயகி. இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களாக செவிலியர் ஆக பணியாற்றி வந்தார்.

 

நேற்று இரவு பணிக்கு சென்றவர் உணவை சாப்பிட்ட பிறகு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தையல்நாயகியின் பெற்றோருக்கு தகவல் அளித்த சுகாதார நிலைய அலுவலர்கள் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தையல்நாயகி ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon