--- --:--:-- --

திடீர் கன மழை.. நெல் மூட்டைகள் நனைந்து சேதம்..!

8

திருவாரூரில் வெயிலின் தாக்கத்தால் நெல் விளைச்சல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்கிறது. ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

இதனால் வாகன ஓட்டிகள் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் மன்னார்குடி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.

 

சாலையில் இருந்து 5 அடி பள்ளத்தில் உள்ள இந்த கொள்முதல் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் கவலை அடைந்துள்ள விவசாயிகள் நெல் மூட்டைகளை பாதுகாக்க நிரந்தர கட்டிடம் கட்டிதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon