--- --:--:-- --

வாட்ஸ் அப் செயலி திடீர் கோளாறு! மக்கள் அவதி

2

வாட்ஸ் அப் செயலியில் வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்புவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டதால் வாட்ஸ் அப் டவுன் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

 

உலகில் 180 நாடுகளை சேர்ந்த 150 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் மட்டும் 40 கோடி பயனாளர்கள் இருப்பதாக குறிப்பிடுகிறது. இவ்வாறு உலகின் மிகப்பெரிய தகவல் தொழில் தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ள வாட்ஸ் அப் செயலியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் கோளாறு ஏற்பட்டது.

 

இது இணைய தளங்களில் பெரிய அளவில் எதிரொலித்தது. வாட்ஸ் அப் டவுன் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டானது. திடீரென்று ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon