நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் விஜய்..!
இன்று(மே 5) காலை பனையூரில் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதையடுத்து ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார். அதன்படி நாளை விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது.
ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு தவெக சார்பில் ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





