விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் – திருமாவளவன்
தமிழக மக்கள் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக்கழகத்தைத் (தவெக) தேர்ந்தெடுத்திருக்கின்றனர். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய்யை உடனடியாகப் பதவியேற்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் இன்னும் ஒரு தெளிவான முடிவை எடுக்காமல் காலதாமதம் செய்வது, தேவையற்ற அரசியல் குழப்பம் உருவாவதற்கே வழிவகுக்கும். இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.
ஆளுநர் மாளிகையிலேயே 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் காண்பித்துவிட்டுத்தான் பதவி ஏற்புக்கு வர வேண்டும் என ஆளுநர் நிபந்தனை விதிக்க முடியாது. தவெக தலைவர் விஜய்க்குப் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைச் சட்டமன்றத்தில்தான் (Floor Test) நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து ஆளுநர் காலதாமதம் செய்வது முறையாகாது. “விஜயை பதவியேற்புக்கு அனுமதிக்க வேண்டும்..118 எம்எல்ஏக்கள் ஆதரவை என்னிடம் காண்பியுங்கள் என ஆளுநர் சொல்ல முடியாது”- விசிக தலைவர் திருமாவளவன்





