--- --:--:-- --

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செல்ல சிறப்பு ரயில்..!

10

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சார்லபள்ளி – வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்பட உள்ளன. வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

 

அதன்படி, ரயில் எண் 07125 சார்லபள்ளி – வேளாங்கண்ணி விரைவு சிறப்பு ரயில் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சார்லபள்ளியில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 07126 வேளாங்கண்ணி – சார்லபள்ளி விரைவு சிறப்பு ரயில், ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் மாலை 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும்.வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

 

அதன்படி, ரயில் எண் 07125 சார்லபள்ளி – வேளாங்கண்ணி விரைவு சிறப்பு ரயில் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சார்லபள்ளியில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

 

 

மறுமார்க்கத்தில் ரயில் எண் 07126 வேளாங்கண்ணி – சார்லபள்ளி விரைவு சிறப்பு ரயில், ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் மாலை 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon