ஓ.என்.வி இலக்கிய விருதை திரும்ப அளிப்பதாக வைரமுத்து அறிவிப்பு..!
கேரள மாநிலத்தின் பெருமை மிக்க ஓ.என்.வி இலக்கிய விருதை திரும்ப அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். இலக்கிய விருதை ஓ.என்.வி கல்சுரல் அகடமிக்கே திருப்பி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
காழ் புணர்ச்சி கொண்ட சில பேரின் குறுக்கீட்டினால் விருது மறுபரிசீலனை என அறிவிக்கப்பட்டதை அறிகிறேன்.
இத்தகைய செயல்பாடுகள் என்னையும், ஓ.என்.வி குருப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமே சிந்தையழிகிறேன். இந்த சர்ச்சைகளுக்கு இடையே இந்த விருதை பெறுவதை நான் தவிர்க்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.






