--- --:--:-- --

திருவாடானையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு எருது கட்டு போட்டி..!

13

திருவாடானையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு எருது கட்டு போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, பிள்ளையாரேந்தல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திருச்சின்னமுடைய அய்யனார் ஆலய புரவி எடுப்பு உற்சவ திருவிழாவை முன்னிட்டும் ஆதியூர்  பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன்,  ஆலய ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு  இரண்டு கிராமங்களில் வடமாடு எருது கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த எருது கட்டு போட்டியில் ஒரு காளைக்கு 9 இளைஞர்கள் என போட்டி ஆரம்பிக்கப்பட்டு 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இந்த 15 நிமிடங்களுக்குள் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும் காளைகளுக்கும் பணம், கோப்பை, பாத்திரங்கள், சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

இதனை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான கிராம மக்கள் பார்வையிட்டனர். திருவாடானை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Right Menu Icon