நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்..!
இந்தியாவில் வரும் 16ஆம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசிகளை அனுப்பும் பணி இன்று தொடங்குகிறது. இந்தியாவின் இரண்டு தடுப்பூசிகளும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து வரும் 16ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. முதற்கட்டமாக களப்பணியாளர்கள் அதை தொடர்ந்து 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்திய அரசுக்கு நிறுவனத்திற்கும் இடையே ஒரு டோஸ் 200 ரூபாய் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசிகளை அனுப்பும் பணி இன்று தொடங்குகிறது. 80 விழுக்காடு தடுப்பூசிகள் விமானம் மூலம் அனுப்பப்பட உள்ளது.
பின்னர் அங்கிருந்து பாதுகாப்புடன் சேமிப்புக் கிடங்குகளுக்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட உள்ளன. குறுகிய தூர இடங்களுக்கு மட்டும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தடுப்பூசி குளிர்சாதன பெட்டியில் வைத்து அனுப்பப்படுகிறது.






