கோவளத்தில் இன்று த.வெ.க. தோழமை கட்சிகள் கூட்டம்..!
தமிழக முதல்வர் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஜூலை 1) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கவும் இந்த முக்கியக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அரசியல் சூழலைப் பயன்படுத்தி தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து, வலுவான கூட்டணியாக ஒன்றாக நிற்பதற்கான திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





