--- --:--:-- --

விஜய் மீது ஊழல் வழக்கு பதியக் கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்

7

மிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், திமுகவின் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ S. செந்தில் செல்வன் ஆகிய இருவரையும் பதவி விலகச் செய்ய, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

 

 

முதலமைச்சர் நேரடியாக இத்தகைய குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதை வைகோ ஒப்புக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து, முதல்வர் விஜய் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி, திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் தமிழ்நாடு ஆளுநருக்கு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon