--- --:--:-- --

வழக்கு பயத்தால் கட்சி மாறுகிறார்கள் : சி.விஜயபாஸ்கரை சாடிய பொள்ளாச்சி ஜெயராமன்

10

சுயநலத்துக்காகவே அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் செல்கின்றனர் என்று அதிமுக மூத்த நிர்வாகியும் பொள்ளாச்சி எம்.எல்.ஏ-வுமான பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

 

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்து வரும் அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், தங்கள் மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு, ஊழல் வழக்கு மற்றும் நில அபகரிப்பு வழக்குகளுக்குப் பயந்து, அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக மட்டுமே இவர்கள் சுயநலத்தோடு கட்சி மாறுகின்றனர் என்று தனது காரசாரமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon