நாடு முழுவதும் 6,715 வங்கி பணியிடங்கள்..!
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 715 துணை மேலாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஐபிபிஎஸ் அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ. தவிர்த்த 11 பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஐ.பி.பி.எஸ் எனப்படும் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 715 துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடையவர்கள், https://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 4 கட்டங்களாக இத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதமும், முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஆளுமைத் தேர்வு நவம்பர் மாதமும், நேர்காணல் டிசம்பரம் மாதமும் நடைபெறும் என ஐபிபிஎஸ் தெரிவித்துள்ளது.





