பெரம்பூர் தொகுதிக்காக மொபைல் செயலியை அறிமுகம் செய்கிறார் விஜய்..!
பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் புதிய பிரத்தியேக மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளார்.
செயலியின் சிறப்பம்சங்கள்:
*இந்த செயலி மூலமாக மக்கள் பதிவிடும் புகார்கள் அனைத்தும் நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு செல்லும். மேலும், இது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும்.
*பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் புகாரைத் தீர்த்து, அதன் தற்போதைய நிலை குறித்து மக்களுக்கு விரிவான பதில் அளிக்கப்படும்.
*தினமும் எத்தனை புகார்கள் வருகின்றன, அவை எந்தெந்த துறைகள் சார்ந்தவை என்பதைத் துல்லியமாகத் தனித்தனியாகப் பிரித்து கண்காணிக்கும் வகையில் ஒரு நவீன ‘டேஷ்போர்ட்’ அமைப்பும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது.





