கடலில் மூழ்கிய மகனை காப்பாற்றி தந்தை உயிரிழந்த சோக சம்பவம்..!
சென்னையில் விநாயகர் சிலையை கடலில் கரைக்க சென்ற போது கடலில் விழுந்து தத்தளித்த மகனின் உயிரைக் காப்பாற்றிய போது கடலில் மூழ்கி தந்தை உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு பின்னர் மகன்களுடன் சிலையை பாலவாக்கம் கடற்கரை பகுதியில் கரைக்கு சென்றுள்ளார்.
கடலில் சிலையை கரைக்கும் போது அலை அவரின் மகனை இழுத்துச் சென்றுள்ளது. தன் மகனை கடல் அலையில் இருந்து சுரேஷ் காப்பாற்றி கரைக்கு வரும் பொழுது எதிர்பாராத விதமாக சுரேஷ் சிக்கியுள்ளார். அந்தத் தருணத்தில் மகனை கரையோரம் தூக்கி எறிந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு விட்டனர். இதனால் மகன் தப்பித்துவிட்டார். ஆனால் சுரேஷை கடல் அலை இழுத்துச் சென்றுவிட்டது.






