--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

11

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களிலும் ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon