--- --:--:-- --

விபத்தை வேடிக்கை பார்த்த நபருக்கு நேர்ந்த சோகம்..!

7

போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தை வேடிக்கை பார்த்தபடி சென்ற வரும் விபத்திற்கு உள்ளாகி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மதுரவாயில் பைபாஸில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் யோகா என்பவர் உயிரிழந்தார்.

 

இந்த நிலையில் அந்த வழியாக சென்ற தங்கராஜ் என்பவர் விபத்து நடந்த இடத்தை பார்த்துக்கொண்டே சென்றுள்ளார். அப்பொழுது அவரது இரு சக்கர வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியுள்ளது.

இதனால் தடுமாறி கீழே விழுந்த தங்கராஜும் உயிரிழந்தார். இரண்டு விபத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon