--- --:--:-- --

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

images

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் சிறை தண்டனை என கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

2018-19 மதிப்பீட்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் சென்ற ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது, ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாயை உச்சவரம்பை தாண்டும் அனைவரும் கட்டாயமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும், ஆதாயத்திற்காக வீட்டுக்கடன் சேமிப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமான வரி உச்சவரம்பு குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் 2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சம்பளம் , வீடு, விவசாயத்தில் ஆண்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் என ஆண்டு வருவாய் 50 லட்சத்திற்கும் உள்ள தனிநபர் ITR ஒன்று என்ற படிவம் மூலம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

 

www.incometaxindiaefilling.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். ஆகஸ்ட் 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் தாக்கல் செய்யப்படும் காலதாமதமாக செய்யப்பட்டதாக தான் எடுத்துக்கொள்ளப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அப்படி காலதாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு அவர்கள் வருமானத்திற்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த அபராத தொகையுடன் வருமான வரி தாக்கல் செய்யும் வரை செலுத்தவேண்டிய வழிகாட்டியும் செலுத்த நேரிடும் என்று வரிச்சலுகை பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் உரிய தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்தால் அவர்களுக்கு தொகை வட்டியுடன் வழங்கப்படும்.

 

காலதாமதமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் சட்டப்படி மூன்று மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். எனவே கடைசி நேர நெரிசலை தவிர்த்து உரிய நேரத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon