த.வெ.க தலைவர் விஜய், மாம்பலம் வேட்பாளர் ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு மீது வழக்குப்பதிவு..!
தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை மீறி அதிக அளவில் கூட்டத்தைக் கூட்டியதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தோஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் த.வெ.க தலைவர் விஜய், மாம்பலம் வேட்பாளர் ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நிகழ்விற்குப் பதிலாக ‘ரோடு ஷோ’ நடத்தியதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து கடும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்,






