--- --:--:-- --

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3000 கோடி நிதி உதவி…! பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!

34563

மிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியை 3,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார்.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ள நிலையில் அதற்கு அடுத்த இடங்களில், ஆந்திரா, கர்நாடகம், புதுடெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த 10 மாநிலங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

 

தடுப்பு பணிகளுக்கு ரூ.3000 கோடி நிதி

இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் பங்கேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.அப்போது ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

 

அப்போது பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ரூ.712.64 கோடியை இதுவரை தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலையில், 3,000 கோடி ரூபாயாக கூடுதலாக ஒதுக்கி நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 

மேலும் கொரோனா பரிசோதனைக்காக தமிழக அரசு நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் செலவிடுகிறது எனவும் பிசிஆர் சோதனைக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்ற முதல்வர், பிசிஆர் சோதனைக்கான செலவை பிரதமர் கேர் நிதியில் இருந்து ஒதுக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon