--- --:--:-- --

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலை கவலைக்கிடம்

234234

மூளையில் கட்டியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் கொரோனா தொற்றுக்கும் ஆளான முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று அவரே டுவிட்டரில் பதிவிட்டிருந்தார், இந்நிலையில் மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக அவருக்கு டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றும் பாதிக்கப் பட்ட நிலையில் அவருடைய உடல் நிலை மோசமாகியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

 

84 வயதான பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமானதால் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவருடைய உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனைக்கு விரைந்து, பிரணாப்பின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பிரணாப் முகர்ஜி உடல் நிலை மோசமடைந்தது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா, மே.வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் கவலை தெரிவித்துள்ளதுடன் அவர் பூரண குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon