--- --:--:-- --

சட்டப்பேரவையில் ‘பொய்’ என்ற வார்த்தை பயன்படுத்தலாமா?: மரிய வில்சன் – தங்கம் தென்னரசு – இ.பி.எஸ் பேச்சு

4

ட்டப்பேரவையில் ‘பொய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், “நேர்மையாக இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு எங்கள் முதல்வரே சாட்சி; எப்போதும் பொய் சொல்ல மாட்டோம் என்பது எங்கள் தலைவர் சொல்லிக் கொடுத்த பாடம்” என்று பேசினார்.

 

 

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “பொய் என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘உண்மைக்கு மாறான’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரைத்தார்.இருப்பினும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு, “அவையில் ஒரு உறுப்பினர் பொய் சொல்கிறார் என்று கூறக்கூடாதே தவிர, ‘பொய்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்பதில்லை.

 

 

அப்படி என்றால் ‘பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ என்ற திருக்குறளைக் கூறும்போது அதில் உள்ள பொய் என்ற வார்த்தையை நீக்க முடியுமா?” என வினா எழுப்பினார். தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த காலத்தில் பேரவையின் மரபைக் காக்கவே ‘உண்மைக்கு மாறான’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது பொய் என்ற வார்த்தையை நீக்கினார்கள்; எனவே, அதே அவை மரபைக் கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon