இந்தி பேசும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் தந்திரம்: தமிமுன் அன்சாரி
தொகுதி மறுவறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பேசிய ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி, இந்தி பேசும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தந்திரம் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களைப் போல் தென் மாநிலங்களின் குரல்களும் கவனிக்கப்படாமல் இருக்கவே இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக தமிமுன் அன்சாரி விமர்சனம் செய்தார். மகளிர் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தனிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




