--- --:--:-- --

திருநங்கையிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞருக்கு விழுந்த அடி..!

4

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று வந்த திருநங்கையிடம் அத்துமீறிய போதை இளைஞரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருநங்கை ஒருவரிடம் கஞ்சா போதையில் விக்னேஷ் என்ற இளைஞர் பணம் கேட்டு அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சக திருநங்கைகள் அந்த இளைஞரை ஓட ஓட விரட்டி உருட்டு கட்டையால் வெளுத்து வாங்கினர்.

 

போலீசார் அவரை மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் சற்று பதற்றமான சூழல் நிலவியது.

 

Right Menu Icon