நகை வாங்குவது போல் நடித்து நகையை திருடிய பெண்..!
சென்னை முகப்பேரு கிழக்கில் நகை கடை நடத்தி வருகிறார் ஒருவர். கடந்த26 ஆம் தேதி இவரது கடைக்கு நகை வாங்க வந்த ஒரு பெண் ஒருவர் நகையை தேர்வு செய்திருக்கிறார்.
அப்போது இந்த நகை தனக்கு வேண்டும் என்றும் அதே போல எடுத்து வையுங்கள் ஏடிஎம் இருந்து பணம் எடுத்து வருவதாக அவர் கூறிவிட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் அந்த கடைக்கு வரவில்லை.
உடனடியாக அங்கு இருக்கக்கூடிய ஊழியர்கள் நகையை சோதனை செய்தபோது 3 சவரன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடி செல்லக்கூடிய காட்சி அதில் பதிவாகியுள்ளது.
உடனடியாக கடையின் உரிமையாளர் அளித்த புகார் தொடர்பாக காவல் துறையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர் பழைய குற்றவாளியாக என்று கூறி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.







