காட்டு யானையை கண்டு அச்சமடைந்த கிராம மக்கள்..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை வழி தெரியாமல் தடுமாறுகிறது. நெல்லி மலை வடபகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை சமயபுரம் கிராமத்திற்குள் புகுந்தது.
குறுகிய கிராம சாலையில் சென்ற யானை எந்த வழியாக வெளியே செல்வது என தெரியாமல் சமயபுரம் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றியது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் 20 நிமிடங்கள் வெளியேற வழி தெரியாமல் சுற்றிய யானை கடைசியில் வந்த வழியை கண்டறிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.





