அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம்..!
தமிழக அரசுக்கு எதிராகவும் பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் அரசு பள்ளி ஆசிரியயுமான உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை உமாமகேஸ்வரி மாணவர்கள் நலம் குறித்தும் கல்வி திட்டங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருகிறார்.
சமூக செயற்பாட்டலாக அறியப்பட்டிருந்த தமிழக அரசுக்கு எதிராகவும் பள்ளி கல்வித்துறைக்கு எதிராகவும், whatsapp, facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்திய செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர் உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.





