--- --:--:-- --

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்..!

5

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ரவிச்சந்திரன் பணிபுரிந்து வருகிறார். அப்பள்ளியில் பயின்று வரும் மாணவியிடம் ரவிச்சந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் அதிகாரிகள் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்ந்து தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமறைவாகிவிட்ட நிலையில் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மற்றொருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon