மருத்துவரை மிரட்டி லஞ்சம் பறித்த காவல் ஆய்வாளர்..!
செங்கல்பட்டு அருகே 12 லட்சம் ரூபாய் வாங்கிய புகாரில் தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் 17 வயது சிறுமிக்கு கருத்தரிப்பு புகாரில் மருத்துவரை மிரட்டி 18 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தாம்பரம் ஆணையர் விசாரணை நடத்தினார்.
இதன் அடிப்படையில் ஆய்வாளர் சங்கீதாவை பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இவர் தலைமறைவாகினார். பொன்னேரியில் பதுங்கி இருந்த வரை தனி படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





