வீடுகளுக்குள் பள்ளங்கள் தோண்டிய நகராட்சி நிர்வாகம்.. மக்களுக்கு சோகம்..!
ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீதியில் கால்வாய் கட்டுவதாக தெரிவித்து வீடுகளுக்குள் பள்ளம் தோண்டியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு ஐந்தாவது வீதியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வீடுகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்ற வீடுகளுக்கு வெளியே கால்வாய் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வீடுகளுக்குள் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் கழிவு நீரை தேக்கி வைத்து பின்னர் பைப்லைன் மூலம் வெளியேற்றும் பணி என்றும், இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.





