இன்றும் மலை ரயில் போக்குவரத்து ரத்து
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் 2வது நாளாக இன்றும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
ரயில் பாதையில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.





