அந்தியோதயா ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்- பெண் காயம்
நாகர்கோவிலில் இருந்து சென்ற அந்தியோதயா ரயில் மீது ஆரல்வாய்மொழி பகுதி அருகே மர்ம நபர்கள் கல் வீசியுள்ளனர். இந்தக் கல்வீச்சில் ரயிலின் கண்ணாடி உடைந்து, இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண் பயணிக்கு காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாகர்கோயில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





