--- --:--:-- --

சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த நபர் கைது..!

9

சேலத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொன்னேரி பட்டியை சேர்ந்த தாஸ் என்பவரின் மகன் அபிஷேக் என்பவருக்கு நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற அவர் சிறுமியை கட்டாய திருமணம் செய்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon