கடல் அலையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு..!
சிதம்பரம் அருகே அய்யம்பட்டி கடற்கரையில் 5 வயது சிறுவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புதுக்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அய்யம்பட்டி மீனவ கிராமத்தை சேர்ந்த 5 வயது மகன் இயற்கை உபாதையை கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.
சிறுவன் நீண்டநேரம் ஆகியும் வராததால் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கடற்கரையில் சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது. இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மீனவ கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





