--- --:--:-- --

ஆசியாவின் பெரும்பணக்காரர் ஆன சீனாவை சேர்ந்த நபர்..!

12

சீனாவில் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபரான சோங் ஜான்சன் முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆகியுள்ளார் . சீனாவை சேர்ந்தவர் சோங் ஜான்சன் பயாலஜிக்கல் ஃபார்மசி, நோங்பு ஸ்பிரிங் ஆகிய நிறுவனங்களின் அதிபராவார்.

 

இவரது நிறுவனங்கள் ஊடகம், காளான் வளர்ப்பு, நலவாழ்வு ஆகிய துறைகளிலும் தோன்றியுள்ளன. நிறுவனத்தின் கணக்குப்படி இந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 5 லட்சத்து 68 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

 

இதனால் சொத்து மதிப்பில் இந்தியாவின் முகேஷ் அம்பானியை விட சோங் ஜான்சன் ஆசியாவின் பெரும் பணக்காரராக விளங்குகிறார். பதினோராவது பெரும் பணக்காரராக விளங்குகிறார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon