--- --:--:-- --

வாயால் தூரிகை பிடித்து ஓவியங்களை வரைந்த சிறுவன்..!

11

தெலுங்கானாவில் விபத்தில் கை, கால்களை இழந்த சிறுவன் வாயால் தூரிகை பிடித்து எழில்மிகு ஓவியங்களை வரைந்த விடா முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

 

தெலுங்கானாவின் மேளக் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கடந்த ஆண்டு செப்டம்பரில் விபத்தில் சிக்கியதால் அவனது இரு கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டன. ஆனால் மனம் தளர்ந்த அவருக்கு புகழ் பெற்ற ஓவியர் வாயால் தூரிகை பிடித்து ஓவியம் வரையும் கலையை கற்று கொடுத்துள்ளார்.

 

ஆடி மாதத்தில் ஓவியக் கலையை கற்ற சிறுவன் கண்ணையும் கருத்தையும் கவரும் எழில்மிகு வண்ண ஓவியங்களை வரைந்து தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

Leave a Reply

Right Menu Icon