--- --:--:-- --

பட்டியலின நபரை காலில் விழ வைத்த விவகாரம்.. திமுக நிர்வாகி தலைமறைவு..!

1

ரியலூரில் பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக நிர்வாகி உட்பட ஐந்து பேர் தலைமறைவாகி விட்டனர். பாஜக நிர்வாகி இல்ல சுப நிகழ்ச்சியை ஒட்டி மற்றொரு சமூகத்தினர் ஒரு பகுதியில் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது.

 

அதற்கு மறுநாள் மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள கடைக்கு அன்பரசனின் சகோதரர் திருநாவுக்கரசு சென்றபோது மாற்று சமூகத்தினர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் திருநாவுக்கரசை ஊர் மக்கள் முன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக தெரிகிறது.

 

இது குறித்து அன்பரசன் அளித்த புகாரின் அடிப்படையில் தீண்டாமை, வன்கொடுமை உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து ராஜேஷ் என்பவரை கைது செய்தனர்.

 

மேலும் திமுக பிரமுகர் கண்ணன் உட்பட மேலும் ஐந்து பேரை இரண்டு தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தபால் மூலம் குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்தனர்.

 

Right Menu Icon