ஆபாச படம் பார்த்த இளைஞருக்கு நடந்த சம்பவம்..!
செல்போனில் ஆபாச படம் பார்க்கும் நபர்களின் செல்போன் நம்பரை ஹேக் செய்து அவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் போல் பேசி பண மோசடி செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார்.
அவரிடம் செல்போனில் சைபர் கிரைம் போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் சட்ட விரோதமாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் எனில் இருபதாயிரம் ரூபாய் பண மோசடி கும்பலை போலீசார் புகார் அளித்துள்ளார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






