தினமும் மட்டன், மீன் கொடுக்காததால் மகன் குடும்பத்தையே கொலை செய்த தந்தை..!
கேரளாவில் தந்தையால் குடும்பம் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மகன் தனக்கென்று புதிய வீடு கட்டி வந்ததும் ஏப்ரல் மாதத்தில் குடியேற திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்த பைசல் என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் தந்தையால் வீட்டோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தங்கள் அனைவரையும் கொலை செய்யப்போவதாக தந்தை கூறுவதாக தொடுபுழா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மனைவி இறந்துவிட்ட நிலையில் மற்றொரு பெண்ணுடன் ஹமீத் வாழ்ந்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரை விட்டுப் போய் விட்டதால் மகன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். மகன் வீட்டில் மதிய உணவுக்கு தினமும் மட்டனும், மீனும் கேட்டு வந்துள்ளார்.
அப்படி கொடுக்காத நிலையில் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது சரியாக உணவு தரவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அன்றைய தினம் இரவில் தான் பைசல் குடும்பத்தினரால் எரித்துக் கொல்லப்பட்டார். பைசல் குடும்பத்தில் உணவுப் பிரச்சினை தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.





