கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகள்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினரே வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஞ்சைபுளியம்பட்டி சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மூவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் கணவனை இழந்த மூதாட்டி அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் மூதாட்டிக்கு கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அவரது மகள் மற்றும் மருமகன் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஒரு இரவு மட்டும் வீட்டிற்குள் மூதாட்டி அனுமதிக்கப்பட்டு பின்னர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






