தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் – ராகுல் காந்தி கடும் தாக்கு
தொகுதி மறுவரையறை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள். இந்த மறுவரையறை தமிழ்நாடு மக்களிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்.
இது தமிழ்நாட்டை கடுமையாக பாதிக்கும் விவகாரம் மட்டுமல்ல, மக்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினையாகும். எனவே, தொகுதி மறுவரையறை திட்டத்தை தமிழ்நாட்டு மக்களும், அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.



