--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 311 பேர் உயிரிழப்பு..

IMG_20210516_213124

மிழகத்தில் இன்று 16,6812 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

 

சென்னையில் 6,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் அரசு மருத்துவமனைகளில் 163 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 148 பேரும் என 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17,670 ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வந்த இணைநோய் இல்லாத 84 பேர் உயிரிழந்திருப்பது கவனிக்கத்தக்கது.

 

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,19,342 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவில் இருந்து இன்று 2,13,17 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 13,61,204 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon