விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சேவை வாகனம் அறிமுகம்..!
கொரொனா நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவைக்காக காத்திருக்கும் இதய நோயாளிகளுக்கு உதவும் விதமாக மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சேவை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரொனா நோயாளிகளை கையாளும் பணியில் அதிக அளவிலான ஆம்புலன்ஸ் ஈடுபடுவதால் மகப்பேறு விபத்து மற்றும் தீவிர சிகிச்சை, வியாதி அவதிக்குள்ளாகின்றனர்.
இவர்களுக்கு உதவும் விதமாக மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரசு பெரியார் பொது மருத்துவமனைக்கு இரண்டு மக்கள் சேவை வாகனங்கள் வழங்கப்பட்டன.




