--- --:--:-- --

எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி குறைவு..!

02

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் குறைத்துள்ளன.

 

 

 

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கடந்த சில மாதங்களாகவே வணிக சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 1ஆம் தேதி 19 கிலோ சிலிண்டர்களின் விலையை ரூ. 174 முதல் ரூ. 183.50 வரை குறைத்துள்ளன. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியான இன்றும் வணிக சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

 

வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைந்து 2906 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகப் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 957.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon