--- --:--:-- --

3 மாத நிலுவை ஊதியம் விடுவிப்பு: த.வெ.க அரசுக்கு அண்ணாமலை நன்றி

5

காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, நிலுவையில் இருந்த ஏப்ரல், மே, ஜூன் 2026, மூன்று மாதங்களுக்கான ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ள த.வெ.க அரசுக்கு, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் தனது X பதிவில், திட்டத்தின் பணிகள் எந்தத் தடையும் இன்றித் தொடரவும், திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளின் பணிக்காலத்தை 31.12.2027 வரை நீட்டித்து, அதற்கான அரசாணையை விரைவில் வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon