--- --:--:-- --

கார் கட்டுப்பாட்டை இழந்து குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்து..!

3

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி சொகுசு காரை கிஷோர் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

 

அப்பொழுது அதிவேகமாக வந்த சொகுசு கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. சம்பவத்தில் வீட்டை சேர்ந்த நபர்கள் வீட்டின் அருகே உள்ள உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தம் கேட்டு வந்து பார்க்கையில் வீட்டின் கார் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

மேலும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சொகுசு காரை ஓட்டி வந்த கிஷோர் குமார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Right Menu Icon