--- --:--:-- --

நீர் நிறைந்த குழியில் தவறி விழுந்த சிறுவன்! மூழ்கி உயிரிழந்த சோகம்!

3

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நீர்தேக்க தொட்டி அருகே குழியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உழவர் சந்தை பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்க குழி தோண்டப்பட்டது.

 

பின்னர் பெய்த மழையில் குழி முழுவதும் வெள்ள நீரால் மூழ்கிய நிலையில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இளவரசி என்பவரின் 7 வயது மகனான ஹரிஷ் குழியில் தவறி விழுந்துள்ளார்.

 

குழியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஊழியர்கள் குழியை மூடாமல் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon